
சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு என தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரமான ரவுடிகள் காவல்துறையின் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ரவுடிகளை கண்காணிக்க குழு அமைப்பு :
தமிழகத்தில் தற்போது கொலை மற்றும் கொள்ளை போன்ற சமூக விரோத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்கள் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழக காவல்துறை இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தீவிர கண்காணிப்பு :
இந்நிலையில் இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தமிழ்நாடு காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ரவுடிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியியகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ரவுடிகளை கணிக்கணிக்க உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் ரவுடிகளுக்கு கிடைக்கும் பொருளாதார உதவிகளை தடுக்கவும், அத்துடன் ரவுடிகள் மறுவரையரை படுத்தப்பட்டு காவல்துறையால் தீவிரமாக கண்காணிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இனி இந்த பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் முக ஸ்டாலின்!!
இதனை தொடர்ந்து மிகவும் பயங்கரமான 550 ரவுடிகளை குறிவைத்து தமிழக காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவில் குண்டு வெடிப்பால் 5 பேர் பலி
ஜப்பானில் ஒரு தண்ணீர் பாட்டில் ரூ 1 லட்சமா?
யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டி