விஜய்யின் தவெக முதல் மாநாடுக்கு 17 நிபந்தனைகள் கிடுக்கிப்பிடியுடன் அனுமதி வழங்கிய போலீஸ்!விஜய்யின் தவெக முதல் மாநாடுக்கு 17 நிபந்தனைகள் கிடுக்கிப்பிடியுடன் அனுமதி வழங்கிய போலீஸ்!

நடிகர் விஜய் தொடங்கிய தவெக கட்சியின் முதல் மாநாடுக்கு 17 நிபந்தனைகள் கிடுக்கிப்பிடியுடன் அனுமதி வழங்கிய போலீஸ். இதன் மூலம் விக்கிரவாண்டி மாநாடு நடப்பது உறுதியாகியுள்ளது.

தவெக முதல் மாநாடுக்கு 17 நிபந்தனைகள்

நடிகர் விஜய் கடந்த 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 22-ம் தேதி கட்சி கொடி மற்றும் பாடல் அறிமுகப்படுத்தினார். தற்போது எல்லோரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் விஷயம் என்றால் அது தவெக கட்சியின் முதல் மாநாடு எப்போது என்பது பற்றி தான்.

அதன்படி சமீபத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்தப்படும் என்று நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். எனவே மாநாட்டிற்கு அனுமதி கோரி காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் மனு அளித்தனர். மனு வழங்கி 40 நாட்கள் ஆகியும் எந்த ஒரு பதிலும் கொடுக்காத காவல்துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

Also Read: விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு?  எஸ் பி தீபக் பரபரப்பு விளக்கம்!

ஏற்கனவே காவல்துறை 33 நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் முக்கியமாக  17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அவை பின்வருமாறு.

தவெக முதல் மாநாடுக்கு 17 நிபந்தனைகள்

  • அக்டோபர் 27 போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது.
  • வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்
  • மேலும் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தக் கூடாது.
  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு தடுப்புடன் கூடிய இருக்கை வசதிகள் இருக்க வேண்டும்.
  • குறிப்பாக  ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், மாநாட்டு திடலில் நிறுத்த வேண்டும்.
  • பங்கு பெரும் மக்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி, உணவு சுகாதாரமான முறையில் வழங்க வேண்டும்.
  • பேனர், பிளக்ஸ் போன்றவைகளை வளைவு பகுதிகளில் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கக் கூடாது.
  • மேலும் தலைவர் விஜய் மாநாட்டிற்கு வரக்கூடிய வழிகளில் தடுப்புகள் அமைத்திருக்க வேண்டும்.
  • மாநாட்டில் எல்இடி திரைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்.
  • மேலும் மாநாடு நடக்கும் இடத்தில் இருக்கும் திறந்தவெளி கிணறுகள் மூடப்பட்டிருக்க வேண்டுமென 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளார்.    

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ

இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லாமல் வாழும் 6 ஹீரோக்கள்

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *