சென்னையில் ‘ரூட் தல’ என்ற பேனருடன் ஊர்வலம் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்ததுடன் மட்டுமல்லாமல் ஊர்வலம் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
‘ரூட் தல’ என்ற பேனருடன் ஊர்வலம் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்
JOIN WJATSAPP TO GET DAILY NEWS
பச்சையப்பன் கல்லூரி :
சென்னை கீழ்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலர் ‘ரூட் தல’ என்ற பேனருடன் பேருந்தில் வந்ததோடு மட்டுமல்லாமல் ஊர்வலமாக செல்லமுயன்றனர். உடனடியாக இதனை பார்த்த அங்கிருந்த போலீசார் மாணவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து பேனரை பறிமுதல் செய்து அறிவுரை கூறி அனுப்பி வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தற்போது நடப்பு கல்வியாண்டிற்கான கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தந்த ரூட்டில் இருக்கக்கூடிய மாணவர்கள் ஒன்று சேர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கிறோம் என்ற பெயரில் ஊர்வலமாக பேனர் மற்றும் மாலையோடு கல்லூரி வளாகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றனர். இந்த தகவலை அறிந்த கல்லூரி முதல்வர் நுழைவாயிலை பூட்டுப் போட்டுவிட்டு சென்று விட்டார்.
CBSE மற்றும் ICSE பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு ! தமிழ்நாடு அரசு விளக்கம் முழு விபரம் !
மேலும் அதனைத்தொடர்ந்து சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த சில மாணவர்கள் கையில் பேனருடன் ஊர்வலமாக செல்ல முயன்ற நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பிவைத்தனர்.