தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று 6 மணியுடன் ஓய்கிறது: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நாடு முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க இருப்பதால், அதற்கேற்ற முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மேலும் இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மக்களின் ஓட்டுக்களை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், இன்று(17.04.2024) மாலை 6 மணியுடன் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை ஓய்கிறது. இதனால் இன்று அதிகாலையில் இருந்து பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்