Pondicherry Poisonous Gas attack 2024 புதுச்சேரியில் விஷவாயு தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு: தற்போதைய காலகட்டத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய் கொண்டிருக்கும் நிலையில், இந்த மனித கழிவுகளை மனிதனே அகற்றும் சூழ்நிலை எப்போது மாறப்போவது என்று தெரியவில்லை. சாக்கடையில் இறங்கி கழிவுகளை அகற்றும் மனிதர்களுக்கு அதற்குள் இருக்கும் விஷவாயுவை தாங்க முடியாமல் சிலர் இறந்தும் போயுள்ளனர். இதனால் தான் அரசாங்கம் சாக்கடையில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய சொல்ல கூடாது என்று முன்னரே எச்சரித்து இருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் ஒரு சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தான் மூதாட்டி செந்தாமரை (72).
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இவர் இன்று காலை கடனை கொடுக்க கழிவறைக்கு சென்ற நிலையில் திடீரென அவர் மயங்கி விழுந்து உள்ளார். அவர் விழுந்த சத்தத்தை கேட்டு அந்த மூதாட்டி மகள் காமாட்சியும் கழிவறைக்கு சென்ற போது அவரும் மயங்கி கீழே விழுந்துள்ளார். அதையடுத்து காமாட்சி மகளும் சென்றுள்ளார். உடனே அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு செல்லும் வழியிலேயே தாயும் மகளும் பேத்தியும் உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதற்கு விஷவாயு தான் காரணம் என்றும் புதுநகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியான Gas வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
பொறியியல் மாணவர் சேர்க்கை 2024: விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்.., மாணவர்களே உடனே Apply பண்ணுங்க!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல்
T20 உலகக்கோப்பை 2024 புள்ளியல் பட்டியல் வெளியீடு