Home » செய்திகள் » பொங்கலுக்கு 14104 சிறப்பு பேருந்துகள்.., அப்புறம் என்ன பொங்கலை கொண்டாட ரெடியா?

பொங்கலுக்கு 14104 சிறப்பு பேருந்துகள்.., அப்புறம் என்ன பொங்கலை கொண்டாட ரெடியா?

பொங்கலுக்கு 14104 சிறப்பு பேருந்துகள்.., அப்புறம் என்ன பொங்கலை கொண்டாட ரெடியா?

இந்த ஆண்டு பொங்கலுக்கு 14104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக சமூக வலைதளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமான ஒன்று தான் பொங்கல் பண்டிகை. வருடந்தோறும் மக்கள் இந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில் இந்த ஆண்டு வருகிற ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

மேலும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆறு நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர். எனவே மக்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அரசு பொங்கல் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான முன் பதிவுகள் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே முடிவடைந்தது.

இந்நிலையில், இந்நிலையில் முன்பதிவு செய்ய தவறிய மக்களுக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து ஜனவரி 10 முதல் 13ம் தேதி வரை கிட்டத்தட்ட 14104 பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக 8,368 பேருந்துகள் இயங்கும் நிலையில், தற்போது கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!!

தமிழகத்தில் நாளை (07.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!

தமிழகத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ்.., மத்திய அரசு அதிரடி!!

சீனாவில் தீவிரமாக பரவும் HMPV வைரஸ்.., அறிகுறிகள் என்ன?.., எப்படி தடுக்கலாம்?

சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து.., 6 பேர் உயிரிழப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top