பொங்கல் பண்டிகை 2025: தமிழகத்தில் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று தான் பொங்கல் திருவிழா. அந்த நாளில் மக்கள் தங்களது குல தெய்வங்களை வேண்டி வீட்டில் சர்க்கரை பொங்கல் வைத்து கரும்பை கடித்து விழாவை கொண்டாடுவார்கள்.
பொங்கல் பண்டிகை 2025
அந்த நாளை மேலும் சிறப்பிக்க தமிழக அரசு பொங்கல் சாமான், பணம், வேட்டி சேலை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் அடுத்த ஆண்டு 2025ல் வரப்போகும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” வருகிற 2025ம் ஆண்டு கொண்டாடப்பட இருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,77,22,995 வேட்டிகளையும், 1,77,64,476 சேலைகளும் உற்பத்தி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: நாதக தலைவர் சீமான்(29.08.2024)மீது திடீர் வழக்குப்பதிவு – என்ன காரணம் தெரியுமா?
மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உற்பத்தி செய்து வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மக்களுக்கு சரியாக வேட்டி சேலை கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக விரல் ரேகைப் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதை கண்காணிக்க வருவாய் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்களே ஜாக்கிரதை – AC மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்
கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?