பொங்கல் பண்டிகை 2025 ரயில் டிக்கெட் முன்பதிவு - இன்று முதல் தொடக்கம் IRCTC அறிவிப்பு !பொங்கல் பண்டிகை 2025 ரயில் டிக்கெட் முன்பதிவு - இன்று முதல் தொடக்கம் IRCTC அறிவிப்பு !

வரும் பொங்கல் பண்டிகை 2025 ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இணையதளத்தின் வழியாகவும், டிக்கெட் கவுண்டர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (12 .09.2024) முதல் விரைவு ரயில்களில் பயணம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. Pongal Festival 2025 Train Ticket Booking

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி போகிப் பண்டிகையும், 14ம் தேதி தைப்பொங்கலும், ஜனவரி 15ம் தேதி மாட்டுப்பொங்கலும், ஜனவரி 16ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது.

இதன் அடிப்படையில் ரயில் டிக்கெட்களை ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளத்திலும், ரயில்நிலைய டிக்கெட் கவுண்டர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து 2024ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதே சமயம் ஜனவரி 11ம் தேதி பயணம் செய்பவர்கள் நாளை (13-09-2024) முதல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மதுரை மகளிர் தங்கும் விடுதி தீ விபத்து – உரிமையாளர் கைது !

அத்துடன் ஜனவரி 12ம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 14ம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதனையடுத்து ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகையன்று பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 15ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *