மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டணை மற்றும் 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உதரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதன் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS
மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி :
முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. மேலும் சிலர் தரப்பில் சிறை தண்டனையை மட்டுமே நிறுத்திவைக்கப்பட்டதாக தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் பத்திரம் விவகாரம்.., SBI வங்கி பிரமாண பத்திரம் தாக்கல்.., உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு!!
இதன் மூலம் காலியானதாக அறிவிக்கப்பட்ட திருக்கோவிலூர் தொகுதி வாபஸ் பெறப்பட்டு மீண்டும் MLA வாக முன்னாள் அமைச்சர் பொன்முடி அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.