அமைச்சர் பொன்முடி
முன்னாள் அமைச்சர் பொன்முடி வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதன் காரணமாக அவருடைய பதவியை இழந்த அவர் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதனால் அவருடைய தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அவரை பதவியில் அமர்த்த வேண்டும் என்று ஆளுநருக்கு முக ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் ஆளுநர் செவி சாய்க்காததால் தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதையடுத்து ஆளுநர் இன்று காலை 11 மணி அளவில் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்வதாக அறிவித்திருந்தார். அதன்படி கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சியானது நடைபெற்றது. பொன்முடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து பொன்முடி உயர் கல்வித்துறை அமைச்சரானார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.