போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் 2024: தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் பணத்தை சேமிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு காரணம், எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் நிற்க வில்லை என்றும், சிக்கல் இல்லாத எதிர்கால வாழ்விற்காக தான் சேமித்து வைக்க நினைக்கின்றனர். அப்படி சேமிப்பவர்களுக்கு தபால் நிலையங்கள் சிறந்த தேர்வாக உள்ளது. அதன்படி சேமிக்க விரும்புவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் பலத் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் உள்ள சூப்பரான சேமிப்பு திட்டம் ஒன்று தற்போது விரிவாக பார்க்கலாம்.
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் தெரியுமா? இதுல 5 வருடத்தில் 12 லட்சம் பெறலாம்?
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் 2024:
இந்த scheme மூலம் குறைந்த பட்சமாக 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இதற்கு இல்லை. எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்ய முடியும். இந்த சேமிப்பு திட்டம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல் இல்லாமல் பாதுகாப்பான வருமானத்தை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் தபால் நிலையம் 7.50 சதவீத வட்டி விகிதம் வழங்குகிறது. அதுமட்டுமின்றி இந்த திட்டத்திற்கு பிரிவு 80 சி-யின் கீழ் ரூ.1.50 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் வகைகள்:
1. 1 வருட டைம் டெபாசிட்: 6.9 %
2. 2 வருட டைம் டெபாசிட்: 7.0 %
3. 3 வருட டைம் டெபாசிட்: 7.1 %
4. 5 வருட டைம் டெபாசிட்: 7.5 %
விண்ணப்பிப்பதற்கான தகுதி:
இந்த திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க நினைக்கும் நபர்களுக்கு 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். இளம் வயது முதலீட்டாளர்களுக்கு TD சிறந்த தேர்வாக இருக்கும். அதுமட்டுமின்றி பெற்றோர்கள் குழந்தைகளின் பெயரிலும் கணக்குகளை தொடங்கலாம்.
சென்னை கிண்டி மருத்துவர் கத்திக்குத்து – தமிழக முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!
விண்ணப்பிப்பது எப்படி?:
உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ்-க்கு சென்று இந்த சேமிப்பு திட்டத்திற்கான படிவத்தை பூர்த்தி செய்து அதற்கு தேவையான ஆவணங்களுடன் இணைத்து, அதோடு நீங்கள் சேமிக்க விரும்பும் தொகையையும் சேர்த்து வழங்கி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை
மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை
CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024
9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்