இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2023. இந்திய அஞ்சல் துறை ( INDIA POST) 1854ம் ஆண்டு முதல் மக்களுக்கு தபால் மற்றும் நிதி சேவையை வழங்கி வருகின்றது. இங்கு விளையாட்டு வீரர்களின் கீழ் உதவியாளர் , MTS பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2023 ! 12 வது தேர்ச்சி போதும் !
இந்தியா போஸ்ட்டில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
அமைப்பின் பெயர் :
இந்திய தபால் ( INDIA POST )துறையில் விளையாட்டு வீரர்களின் கீழ் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. Postal Assistant – தபால் உதவியாளர்
2. Sorting Assistant – வரிசையாக்க உதவியாளர்
3. Postman – தபால்காரர்
4. Mail Guard – அஞ்சல் காவலர்
5. Multi Tasking Staff (MTS) – MTS பணியாளர் பணியிடங்கள் இந்திய தபால் துறையில் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. தபால் உதவியாளர் – 598
2. வரிசையாக்க உதவியாளர் – 143
3. தபால்காரர் – 585
4. அஞ்சல் காவலர் – 3
5. MTS பணியாளர் – 570 என மொத்தம் 1899 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.
தமிழ்நாடு & காலிப்பணியிடங்கள் :
1. தபால் உதவியாளர் – 110
2. வரிசையாக்க உதவியாளர் – 19
3. தபால்காரர் – 108
4. அஞ்சல் காவலர் – 0
5. MTS பணியாளர் – 124 என மொத்தம் 361 காலிப்பணியிடங்கள் தமிழ்நாட்டில் காலியாக இருக்கின்றது.
8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மூலம் வேலை !
கல்வித்தகுதி :
1. தபால் உதவியாளர் :
இளங்கலை மட்டம் பெற்று இருக்க வேண்டும். மேலும் கணினி அறிவு இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
2. வரிசையாக்க உதவியாளர் :
இளங்கலை மட்டம் பெற்று இருக்க வேண்டும்.
3. தபால்காரர் :
அரசின் அனுமதியுடன் இயங்கும் கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
4. அஞ்சல் காவலர் :
அரசின் அனுமதியுடன் இயங்கும் கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
5. MTS பணியாளர் :
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத்தகுதி :
1. தபால் உதவியாளர் – 18 – 27
2. வரிசையாக்க உதவியாளர் – 18 – 27
3. தபால்காரர் – 18 – 27
4. அஞ்சல் காவலர் – 18 – 27
5. MTS பணியாளர் – 18 – 25 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் மேற்கண்ட துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
1. தபால் உதவியாளர் – ரூ. 25,500 முதல் ரூ. 81,100
2. வரிசையாக்க உதவியாளர் – ரூ. 25,500 முதல் ரூ. 81,100
3. தபால்காரர் – ரூ. 21,700 முதல் ரூ. 69,100
4. அஞ்சல் காவலர் – ரூ. 21,700 முதல் ரூ. 69,100
5. MTS பணியாளர் – ரூ. 18,000 முதல் ரூ. 56,900 வரை தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும். இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2023.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
10.11.2023 முதல் 09.12.2023 வரையில் இந்திய தபால் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளத்தின் மூலம் இந்திய தபால் துறையில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
1. பெண்கள் / SC / ST / PwBD பிரிவினருக்கு – கிடையாது
2. மற்றவர்கள் – ரூ. 100
தேர்ந்தெடுக்கும் முறை :
இந்திய தபால் துறையில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்தவர்களில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியில் நியமனம் செய்யப்படுவர்.