லோக்சபா தேர்தல் - தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது.., வீடு தேடி வரும் அதிகாரிகள்!!லோக்சபா தேர்தல் - தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது.., வீடு தேடி வரும் அதிகாரிகள்!!

பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி க்கு செல்ல முடியாதவர்களுக்காக தபால் வாக்கு செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி ஆரம்பமாக இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் மக்களிடம் வாக்கு பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் வாக்குப் பதிவு செய்ய வரும் வாக்காளர்கள் என்னென்ன கொண்டு வர வேண்டும் என்ற விதிமுறைகளை  தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி வயதானோர், கண் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு செல்ல முடியாத பட்சத்தில் அவர்களுக்காக தபால் வாக்கு செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான  தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது. அதன்படி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாக்காளர்களின் தபால் வாக்குகளை சேகரிக்க வீடு வீடாக அதிகாரிகள் சென்று வருகின்றனர். மேலும் இந்த பணி இன்று முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை மொத்தம் 3 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6  மணி வரை சேகரிக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி மேற்கண்ட  நாட்களின் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி மீண்டும் ஒரு முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 

மதுரையில் சமூக அறிவியல் தேர்வுக்கான தேதி மாற்றம்?.., பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? அதிர்ச்சியில் மாணவர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *