நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல்: தபால் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவு
தமிழகத்தில் மக்களவை தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடக்க இருக்கிறது. இதனால் தேர்தல் ஆணையம் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் நாளை மாலை 6 மணியுடன் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருப்பதால், தற்போது பரப்புரை ஆற்றுவதில் தலைவர்கள் அதிரடி காட்டி வருகின்றனர். இதற்கிடையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த பணம் மற்றும் நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதுவரை நாடு முழுவதும் ரூ.4,650 கோடி பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வயதானோர், ஊனமுற்றோர், அரசு ஊழியர்கள் தேர்தலின் போது வாக்களிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் தபால் வாக்குப்பதிவு திட்டத்தை கொண்டு சில நாட்களுக்கு அமல்படுத்தியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதாவது இன்று மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பூத் சிலிப் வழங்கும் பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது.