உருளைக்கிழங்கு சிப்ஸ் உருவான கதை: இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டு வருகின்றனர். ஒரு உருளைக்கிழங்கை பாக்கெட்டில் போட்டு 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இப்பொழுது வரை உருளைக்கிழங்கு சிப்ஸ் எப்படி உருவானது என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.
உருளைக்கிழங்கு சிப்ஸ் உருவான கதை
நியூயார்க்கின் சரடோகா ஸ்பிரிங்கில் உள்ள மூன்ஸ் லேக் ஹவுஸ் என்ற உணவகம் கடந்த பல வருடங்களுக்கு முன்னர் இயங்கி வந்தது. கடந்த 1853ம் ஆண்டில் ஒருநாள் அந்த உணவகத்திற்கு வந்த அமெரிக்க பணக்காரர்களில் ஒருவரான கொர்னேலியஸ் வாண்டர்பில்ட் என்பவர் வந்திருக்கிறார்.
அப்போது அந்த உணவகத்தில், ஜார்ஜ் க்ரம் என்பவர் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். அவர் அந்த சமயம் மிகவும் ஃபேமசானவர். இவர் ஒரு உருளைக்கிழங்கு பொரியலை சமைத்து கொடுத்துள்ளார். ஆனால் அது கொர்னேலியஸ் வாண்டர்பில்ட்க்கு பிடிக்கவில்லை திருப்பி அனுப்பியுள்ளார்.
விஜய் பேச்சை வீட்டில் இருந்து கேட்டு ரசித்த முதல்வர் – கூட்டணி சேருமா? ஆதரவு தருவாரா?
இதனால், விரக்தியடைந்த க்ரம், அருகில் இருந்த உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி ஒரு புதிய உணவைத் தயாரித்தார். அதாவது உருளைக்கிழங்கை மெல்லிய காகிதம் போல் நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுத்து உப்பு தூவி கொடுத்துள்ளார். அந்த உணவு, வாண்டர்பில்ட்க்கு ரொம்பவே பிடித்துப்போனதாம். மறுபடியும் ஆர்டர் செய்து சாப்பிட்டாராம். அதன் பிறகு தான், உருளைக்கிழங்கு சிப்ஸ் பிறந்தது. அது விரைவில் “சரடோகா சிப்ஸ்” என்று அழைக்கப்பட்டது.