சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் பவர்ஸ்டார் திடீரென மருத்துவமனையில் அனுமதி – க்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
பவர்ஸ்டார் சீனிவாசன்:
பிரபல காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை தெரியாதவர்கள் யாராலும் இருக்க முடியாது. மருத்துவராக பணியற்றி வந்த இவர், பல படங்களில் காமெடி ரோலில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த கண்ணா லட்டு திங்க ஆசையா திரைப்படம் அனைவரது பேவரைட் திரைப்படம் என்றே சொல்லலாம்.
மேலும் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், பல சர்ச்சைகளில் சிக்கி மோசடி வழக்குகளில் சிறைக்கு சென்றதும் அளவுக்கு சென்றுள்ளார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டதால், மருத்துவமனை துறையில் பிசியாக இருந்து வருகிறார். இருந்தாலும் பட வாய்ப்புக்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
பவர்ஸ்டார் திடீரென மருத்துவமனையில் அனுமதி – அடக்கடவுளே என்ன ஆச்சு அவருக்கு?
நடிகர் யுவன் ராஜ் நேத்ரன் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை!
இந்நிலையில் பவர்ஸ்டார் தற்போது உடல் நல குறைவால் திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, பவர் ஸ்டார் சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கிண்டியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து, மருத்துவர்கள் கூறுகையில், அவர் ஒரு வாரத்திற்கு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்