
“கில்லி” பட வில்லன் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா? – தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் தனுஷ் நடித்து இயக்கும் ராயன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இதற்கான போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. சினிமாவில் படு பிசியாக இருந்து வரும் இவர் கடந்த 1994ம் ஆண்டு லலிதா குமாரி என்ற நடிகையை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தார். இதனை தொடர்ந்து அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2009ம் ஆண்டு விவாகரத்து செய்து, 2010ம் ஆண்டு பொன்னி வெர்மா என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் பிரகாஷ் ராஜின் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கில்லி படத்தின் வில்லனோட குடும்பமா இது என்று வாயடைத்து போய் உள்ளனர்.