ஹெல்மெட் இல்லாமல் புல்லட் ஓட்டிய பிரசாந்த்.. அதிரடி காட்டிய போலீஸ்.. இதெல்லாம் தேவையா கோபால்!ஹெல்மெட் இல்லாமல் புல்லட் ஓட்டிய பிரசாந்த்.. அதிரடி காட்டிய போலீஸ்.. இதெல்லாம் தேவையா கோபால்!

ஹெல்மெட் இல்லாமல் புல்லட் ஓட்டிய பிரசாந்த்: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் விஜய், அஜித்திற்கு இணையாக டாப் நடிகராக இருந்து வந்தவர் தான் பிரசாந்த். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர் சில வருடங்களுக்கு முன்னர் எடுத்த முடிவால் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

தற்போது விஜய்யுடன் சேர்ந்து கோட் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவான அந்தகன் திரைப்படம் பல வருட போராட்டத்திற்கு பிறகு வெளியாக இருக்கிறது. இப்படம் முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அதற்கு முன்னரே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு ரிலீஸ் தேதியை மாற்றியது.

அதன்படி படம் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருக்கிறது. எனவே படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில் பிரசாந்த் தீவிரமாக ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரசாந்த் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.

Also Read: அட்ரா சக்க.. விஜய்யின் கோட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு –  இத யாரும் எதிர்பார்கலையே!!

அதாவது சமீபத்தில் படத்தை ப்ரோமோஷன் செய்வதாக சாலையில் பைக்கை ஓட்டியபடி ஹெல்மெட் அணியாமல் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

இதை பார்த்த போக்குவரத்து காவல்துறை அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Andhagan movie

தற்போது இந்த விஷயம் இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. ஒரு பக்கம் இதுவே ஒரு ப்ரோமோஷனுக்காக தான் இருக்கும் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.  prashanth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *