தற்போது யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் ஐஏஎஸ் நியமனம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மத்திய பணியாளர் தேர்வாணையம் :
இந்தியாவின் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த மனோஜ் சோனி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார்.
மேலும் மனோஜ் சோனி பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்று அறியப்பட்ட அவர் கடந்த 2023ம் ஆண்டு யுபிஎஸ்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அத்துடன் இவரது பதவிக்காலம் 2029 ஆம் ஆண்டு வரையுள்ள நிலையில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார்.
பதவி விலகல் சர்ச்சை :
இதனை தொடர்ந்து இவரது நியமனத்தின் போது ஆணையத்திற்கு நடுநிலையான நபரைத் தேர்ந்தெடுக்காமல் கட்சியைச் சார்ந்தவர் போன்று இருக்கும் மனோஜ் சோனியைத் தலைவராக எப்படி நியமிக்க முடியும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த வகையில் அண்மைக் காலமாக யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
குற்றசாட்டுகளை உறுதி செய்யும் வகையில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் பல்வேறு முறைகேடுகள் செய்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரியவந்ததை தொடர்ந்து யுபிஎஸ்சியின் தலைவர் மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை – இஸ்ரேல் பயங்கர தாக்குதல்!!
புதிய தலைவர் நியமனம் :
இந்நிலையில் யுபிஎஸ்சிக்கு புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் 1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை செயலாளரும் ஆவார். அத்துடன் ப்ரீத்தி சுதன் யுபிஎஸ்சியின் புதிய தலைவராக நாளை (01.08.2024) பதவியேற்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.