கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாதவை Pregnant women should not eatகர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாதவை Pregnant women should not eat

ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது மகிழ்ச்சியான தருணம் ஆகும். ஆனால் அதை கடந்து வருவது ஒவ்வொரு பெண்ணுக்கும் சவாலாக உள்ளது. மனதில் ஒருவித பயமும், சில சந்தேகங்களும் பெண்களுக்கு உண்டாகும். கரு உண்டாகிய பின் பெண்கள் தங்களையும், தன வயிற்றில் வளரும் குழந்தையையும் நன்றாக கவனித்து கொள்ள வேண்டும். நாம் இக்கால கட்டத்தில் என்ன உணவுகள் சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதில் சிலவற்றை இப்பதிவில் பார்க்கலாம்..

கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாத காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் கருக்கலைப்பு அதிகமாக நடைபெறுவது இக்காலகட்டத்தில் தான்.

பொதுவாக உடலை சூடேற்றும் உணவுகளை உண்ண கூடாது. உதாரணமாக மாம்பழம், பப்பாளி போன்ற பழங்களை முதல் மூன்று மாதம் தவிர்க்க வேண்டும். இது உடலை சூடேற்றி ரத்தப்போக்கை உண்டாக்கும். மேலும் பப்பாளியில் உள்ள லேடெக்ஸ் கருப்பை சுருக்கத்தை உண்டாக்கும். அதே போல் அன்னாசி, எள் போன்றவற்றையும் சாப்பிடக்கூடாது. இவையும் கருச்சிதைவை உண்டாக்கும்.

போன்ற காஃபின் உள்ள பானங்களை அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. அது தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக்கும். அதற்கு பதிலாக பால் எடுத்து கொள்ளலாம். அது தாய்க்கும், குழந்தைக்கும் கால்சியம் சத்து அளிக்கிறது.

கர்ப்பகாலத்தில் இறைச்சி அதிகமாக உட்கொள்ள கூடாது. சிக்கன் அதிகமாக உட்கொள்வது உடலை சூடேற்றும். அது கர்ப்பிணிகளுக்கு நல்லது அல்ல. அசைவ உணவை முற்றிலும் தவிர்க்காமல் அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

கர்ப்பகாலத்தில் முட்டை எடுத்து கொள்வது நல்லது தான். நன்றாக வேகவைத்த முட்டை மட்டுமே கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும். வேகவைக்காத அல்லது பாதி வெந்த முட்டைகளை சாப்பிடுவது சிசுவுக்கு தீங்காகும். அதில் உள்ள சால்மோனெல்லா என்ற பாக்டீரியா தொற்று நோயை உண்டாக்கும்.

TNPSC மற்றும் SSC தேர்வு எழுத போறீங்களா! வரலாற்றில் இன்று 16.11.2024 என்னனு தெரிஞ்சிக்கோங்க

மீன் வகைகளில் சுறா, வாள்மீன், டூனா , வாலி, மார்லின் போன்ற பாதரசம் அதிகம் உள்ள பெரிய அளவுள்ள மீன்களை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த மெர்குரி வகை மீன்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும். அதனால் இதை பச்சையாகவோ, வேகவைத்தோ சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகள், சீன உணவுகள், சாலையோர உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதில் சேர்க்கப்படும் ரசாயன உணவுகள், அஜினோமோட்டோ உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதை தவிர்ப்பது சிரமம் என்றாலும் சிசுவின் நலனில் தாய் பொறுப்புடன் இருக்க வேண்டும்.

கத்தரிக்காய் சிலருக்கு பிடித்த காய்கறிகளில் ஒன்று. கர்ப்பகாலத்தில் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும். மேலும் இது மாதவிடாயை வரவழைக்கும். அதனால் கர்ப்பகாலத்தில் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.

மேலும், கர்ப்பிணிகள் வெந்தயம் மற்றும் வாயு நிரப்பப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றையும் எடுத்து கொள்ளக்கூடாது.

Pregnant women should not eat

கர்ப்பிணிகள் மேலே சொன்ன உணவுகளை தவிர்த்து மருத்துவரின் ஆலோசனையின்படி அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக உணவு எடுத்து கொண்டால் அது குழந்தையின் உடல் எடையை அதிகரித்து பிரசவத்தின் போது சிக்கலை ஏற்படுத்தும்.

Today Tamil news paper PDF Free Download

பிக்பாஸ் ஷோவில் இருக்க சுனிதா வாங்கிய சம்பளம் – எவ்வளவு தெரியுமா?

90s சூப்பர் ஹீரோ சக்திமான் ரிட்டன்ஸ் – பார்ட் 2 ஷூட்டிங் ஆரம்பம் – வைரலாகும் புகைப்படம்!

சூப்பர் சிங்கர் 10 ஷோவின் நடுவர்கள் லிஸ்ட் – புதிதாக இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

பிக்பாஸ் வைல்டு கார்டு போட்டியாளர் சம்பளம் விவரம் – யாருக்கு அதிகம் பாருங்க!

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் தெரியுமா? இதுல 5  வருடத்தில் 12  லட்சம் பெறலாம்?

விஜயாவிடமே கைவசம் காட்டிய ரோஹினி – வசமாக சிக்குவாரா?.. பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *