விஜய பிரபாகரனை திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டாரா: மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் பெரும்பான்மையான இடத்தில் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் விஜயகாந்த் மகன் தேமுதிக கட்சி சார்பாக விஜய பிரபாகரன் நின்றிருந்தார். அவருக்கு போட்டியாக பாஜக கட்சி சார்பாக ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். இவர்களுக்கு இடையே காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரும் போட்டியிட்டார். இதில் வெறும் 246 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரனை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோயம்பேட்டில் இருக்கும் அவருடைய கட்சி அலுவலகத்திற்கு சென்றிருந்த நிலையில், அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, ” நடந்து முடிந்த 18 வது லோக்சபா தேர்தலில் தேமுதிக – அதிமுக கூட்டணி சேர்ந்து 1 கோடி வாக்குகளுக்கு மேல் பெற்று சரித்திரம் படைத்துள்ளோம் என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் என்னுடைய மகன் விஜய பிரபாகரன் தோற்கவில்லை. திட்டமிட்டு சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். எனவே விஜய பிரபாகரன் வீழ்ச்சி அடையவில்லை; வீழ்த்தப்பட்டுள்ளார்.” என்றும் அவர் குற்றம் சாட்டினார். lok sabha election 2024 – DMDK PARTY – captain Vijayakanth – tamilnadu best actor – tamilnadu best politician
நர்சிங் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு 2024.., தேர்வு தேதிக்கான அறிவிப்பு வெளியீடு… உடனே விண்ணப்பியுங்கள்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
நாடாளுமன்றம் செல்ல உள்ள 73 பெண் எம்.பிக்கள் !
இந்திய கால்பந்து அணி வீரர் சுனில் சேத்ரி ஓய்வு
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (07.06.2024) !