தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படும் 'பிரேமலு' திரைப்படம் ! தமிழக உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் - மலையாள படங்களுக்கு இவ்வளவு மவுசா !தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படும் 'பிரேமலு' திரைப்படம் ! தமிழக உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் - மலையாள படங்களுக்கு இவ்வளவு மவுசா !

தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படும் ‘பிரேமலு’ திரைப்படம். பிரேமலு என்ற திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்பட்ட காதல் நகைச்சுவையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். கிரீஷ் ஏடி இணைந்து எழுதி இயக்கிய இப்படத்தில் நஸ்லென் கே.கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளன. மேலும் அதிக வசூல் செய்த இப்படத்தினை தமிழில் மொழிமாற்றம் செய்து திரையரங்குகளில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பிரேமலு’ நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் உலகளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘பிரேமலு’ படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ள நிலையில் மலையாளத்தில் வெளியான இந்தப்படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

என்னது.., அஜித்துடன் சிவகார்த்திகேயன் நடிச்சுருக்காரா?.., எந்த படத்தில் தெரியுமா?.., புகைப்படம் உள்ளே!!

மேலும் டப்பிங் பணிகள் நிறைவடைய உள்ள நிலையில் மார்ச் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் ‘பிரேமலு’ திரைப்படம் வெளியாகவுள்ளது. தற்போது இதன் தமிழ் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *