
விஜய்யின் “தி கோட்” படத்தில் இளையராஜா பாடல்: லியோ படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times). இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் ags நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தற்போது விஜய் அரசியல் வந்த நிலையில், அவர் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் கோட் தான். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படம் வருகிற செப் 5ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விஜய்யின் “தி கோட்” படத்தில் இளையராஜா பாடல்
இந்நிலையில் கோட் படத்தில் நடித்த பிரேம்ஜி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் படத்தை குறித்து நிறைய பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, ” கோட் படத்தை நான் பல முறை பார்த்துவிட்டேன். கண்டிப்பாக இதுவரை விஜய் செய்யாத பல விஷயங்கள் படத்தில் இருக்கிறது. படத்தில் ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடுவார்கள்.
Also Read: தவெக கட்சியின் முதல் மாநாடு ஜனவரிக்கு மாற்றம்? ஏன் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
மேலும் இப்படத்தில் இளையராஜா பாடல் ஒன்று ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. அந்த பாடல் வரும் காட்சிகள் எல்லாம் ஹைப்பாக இருக்கும். தமிழ் சினிமாவில் இதற்கு முன் இப்படியான ஆச்சரியங்களை கண்டிப்பாக நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். விஜய் என்ட்ரி சீன் அசத்தலாக இருக்கும். படத்தைப் பார்த்து முடித்ததும் என் அண்ணனிடம் (வெங்கட் பிரபு) நான் கோட் உலக அளவில் ரூ. 1500 கோடி வரை வசூலிக்கும் என சொன்னேன், பார்ப்போம்.” என்று பிரேம்ஜி கூறி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்
இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா?
இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா?