உச்ச நீதிமன்றம் புதிய கொடியை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி: நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் புதிய கொடி மற்றும் சின்னத்தை நேற்று( ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,” பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் வழக்குகள் அனைத்தையும் முடித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார். தீர்வு காணாமல் வழக்குகள் நிலுவையில் இருப்பது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் புதிய கொடியை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி
மேலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் நீதித்துறை அமைப்பின் காவலாளியாக உச்ச நீதிமன்றம் விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளதாக அவர் பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நீதித்துறை, அரசு மற்றும் போலீஸ் நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். supreme courts new flag
Also Read: ஹைதராபாத்தில் வாடிக்கையாளர் லேப்டாப்பை திருடிய டெலிவரி பாய் – கடைசியில் நடந்தது என்ன?
இதனை தொடர்ந்து ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிமுகப்படுத்திய கொடியில் அசோக சக்கரம், உச்ச நீதிமன்ற கட்டிடம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ஆகியவற்றுடன் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட பல நீதிபதிகள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். president Droupadi Murmu
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை