தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் !தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் !

தற்போது தமிழ்நாட்டிற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் செய்யப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் சென்னை சென்ட்ரலில் செய்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 31) மூன்று வந்தே பாரத் ரயில் சேவைகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

அந்த வகையில் மீரட் – லக்னோ, மதுரை – பெங்களூரு, சென்னை – நாகர்கோவில் என மூன்று வழித்தடங்களில் இந்த ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

அத்துடன் மூன்றில் இரண்டு திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளதால் தமிழக மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 31) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். சென்னை சென்ட்ரலில் இந்த துவக்க நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையானது புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயங்கும்.

அத்துடன் பெங்களூரு – மதுரை வந்தே பாரத் ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை ஆகிய 7 இடங்களில் நின்று செல்ல இருக்கிறது.

அத்துடன் மொத்தம் 16 பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில் இருக்கும் எனவும் இதில் 1 எக்ஸிகியூடிவ் கிளாஸ், மீதமுள்ள பெட்டிகள் ஏ.சி. சேர் காராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல் !

.மதுரை – பெங்களூரு வந்தே பாரத் விரைவு ரயில் மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மேலும் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய 6 நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என்று கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *