Home » செய்திகள் » ஜூன் 20 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை – நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார் !

ஜூன் 20 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை – நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார் !

ஜூன் 20 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை - நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார் !

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து வரம் ஜூன் 20 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தேர்தல் வெற்றியை தொடர்ந்து மோடி 3 வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். அந்த வகையில் பிரதமராக பொறுப்பேற்றதும் பிரதமர் மோடி முதல் பயணமாக ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து வருகிற 20 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வரவுள்ள பிரதமர் மோடி எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம் ! தமிழக அரசிற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கண்டனம் !

வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவிற்காக பிரதமர் மோடி சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்தததும் மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி இந்தியாவில் முதல் பயணமாக சென்னை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top