பிரதமர் மோடிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா: நாட்டில் நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. அதன்படி பாஜக கட்சி தலைவர் நரேந்திர மோடி நேற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். குடியரசு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமராக பதவி ஏற்ற மோடியுடன் சேர்ந்து கிட்டத்தட்ட 72 அமைச்சர்கள் – இணை அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3 வது முறையாக பிரதமராக மோடி வாங்கும் சம்பளம் குறித்து அவருக்கு கிடைக்கும் இதர சலுகைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது இந்திய பிரதமராக இருக்கும் மோடிக்கு மாதம் தோறும் ரூ. 1.66 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவரின் இதர சலுகைகளாக உலகில் மிகவும் பாதுகாப்பான கார்களில் மட்டுமே அவர் பயணிப்பார். அதுமட்டுமின்றி ஒரு இந்திய பிரதமர் ஓய்வு பெற்றவுடன் அரசாங்கம் சார்பாக அவருக்கு இலவச வீடு மற்றும் மருந்து செலவுகளுக்கு ஏற்பாடு செய்யும் என்று கூறப்படுகிறது. மேலும் அவரின் வீட்டை சுற்றி எப்போதும் காவலுக்கு SPG என்ற சிறப்புப் பாதுகாப்புக் குழு இருந்து வரும். மோடி தற்போது டெல்லியில் உள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிற என்பது குறிப்பிடத்தக்கது. pm modi news – india prime minister news – bjp party
தவெக கட்சியின் முதல் நிகழ்வு – ஜூன் 28ல் களமிறங்கும் TVK தலைவர் விஜய் – பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட ஆனந்த்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
T20 world cup 2024: இலங்கையை வீழ்த்தியது வங்காளதேசம்
TNPSC குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது
T20 உலகக்கோப்பை 2024 புள்ளியல் பட்டியல் வெளியீடு.