
பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் வருகை. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழ்நாடு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி :
திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வரவுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து சாலை வழியாக அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெறும் பாஜக சார்பில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதனால் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு ! அடுத்த ஓராண்டுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல தடை – போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு !
இதனால் கன்னியாகுமரி நகர்ப்பகுதிகள் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் தளம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், அரசு விருந்தினர் மாளிகை போன்ற இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். விழா நடைபெறும் இடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 3000 திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.