Home » செய்திகள் » சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில், சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024 நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 20,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முகாமில் 8 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்தவர்கள், ITI தொழிற்கல்வி படித்தவர்கள், பொறியியல் பட்டம். கணினி இயக்குபவர், தையல் கற்றவர் என அனைத்து விதமான தகுதிகளை பெற்ற நபர்களும் கலந்து கொள்ளலாம்.

மேலும் இம்முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம். மேலும் இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்ச்சி, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கி வாயிலாக கடன் வழிகாட்டுதல்கள் போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன.

தனியார் துறை வேலைவாய்ப்பினை பெற ஆர்வமாக உள்ளவர்கள் மற்றும் முகாமில் பங்கேற்க விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தையோ அல்லது www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது என சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 14.12.2024 தேதி நடைபெற உள்ளது.

சென்னை மாதவரத்தில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில், காலை 8:00 முதல் மாலை 3:00 மணி வரை நடக்கிறது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top