
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் தற்கொலை முயற்சி: ஸ்டுடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப் படங்களை தயாரித்து வருபவர் தான் ஞானவேல் ராஜா. இப்பொழுது நடிகர் சூர்யாவின் நடித்து வரும் “கங்குவா” மற்றும் விக்ரம் நடிக்கும் “தங்கலான்”, கார்த்தி நடிக்கும் “வா வாத்தியாரே” உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் இவர் தன்னுடைய வீட்டில் இருந்து தங்கப் பரிசுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் பணிப்பெண் லட்சுமி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இது குறித்து காவல்துறை விசாரித்த போது நான் திருடவில்லை என்றும், எனக்கு இதுக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இன்று விசாரணைக்கு வருவதாகவும் கூறி எழுதி வாங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர். இந்நிலையில் இந்த காரணமாக மன உளைச்சலில் இருந்த லட்சுமி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதை தொடர்ந்து அவரை குடும்பத்தினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.