
அஜித் பட பிரபலம் திடீர் கைது
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் தான் சிவசக்தி பாண்டியன். அந்த வகையில் இவர் தயாரித்த காதல் கோட்டை, வெற்றிக்கொடி கட்டு உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தவை. இதனை தொடர்ந்து இவர் கடந்த 2010 -ஆம் ஆண்டு நடிகா் ஜெய்,நடிகை பூர்ணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த அர்ஜுனன் காதலி என்ற படத்தை தயாரித்தார். மேலும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை, ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்குவதாக கூறி முன் பணமாக ரூ.50 லட்சத்தை சிவசக்தி பாண்டியன் பெற்றுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதன்படி அந்நிறுவனத்துக்கு அவர் வட்டியுடன் சேர்த்து காசோலையை வழங்கியுள்ளார். ஆனால் அந்த வங்கியில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்ததால் அவர் மீது பணமோசடி வழக்கு தொடர்ந்திருந்தார். கிட்டத்தட்ட 10 வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாங்கிய பணத்தில் பாதி பணத்தை திருப்பி தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இப்பொழுது வரை அவர் தராததால், அவருக்கு முன்னர் கொடுத்த 11 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.