சென்னையில் சொத்து வரி 6% உயர்வு - மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !சென்னையில் சொத்து வரி 6% உயர்வு - மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !

தற்போது சென்னையில் சொத்து வரி 6% உயர்வு என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் சொத்து வரி மீண்டும் உயர்த்தப்பட இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2022 ஏப்ரல் 1ஆம் தேதி தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அந்த வகையில் சென்னையில் கடந்த முறை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50%ல் இருந்து 150% வரை உயர்த்தப்பட்டது. மேலும் இடம் மற்றும் கட்டடத்தின் அளவை பொறுத்து வரியில் மாற்றம் செய்யப்பட்டது. Resolution passed in council meeting

அந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 6% வரை சொத்து வரி உயர்த்தி தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. property tax 6% increase under Chennai Corporation areas

மேலும் இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையாளர் லலிதா, நிலைகுழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கான APAAR அடையாள அட்டை என்றால் என்ன? முழு விவரம் உள்ளே!

தற்போது சென்னையில் சொத்து வரி மீண்டும் உயர்த்தப்பட இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *