இன்று பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் விண்ணில் ஏவுதல் நடக்க இருந்த நிலையில் தற்போது நாளைக்கு (டிச. 5) ஒத்திவைப்பு இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ:
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் செலுத்தப்படவிருந்தது. இன்று(டிச. 4) சரியாக மாலை 4.08 மணிக்கு விண்ணில் செலுத்த இருந்தது.
பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு – என்ன காரணம் தெரியுமா?
குறிப்பாக சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் விதமாக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ‘ப்ரோபா 3’ செயற்கைக்கோள்களுடன் தான் இந்த PSLV C-59 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. மேலும் இதற்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இது குறித்த முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ENG – NZ அணிகளுக்கு 3 புள்ளி குறைப்பு – நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு செல்லுமா?
அதாவது, ராக்கெட் தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று விண்ணில் ஏவ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ராக்கெட் நாளை(டிச. 5)தான் விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. குறிப்பாக ‘ப்ரோபா 3’ செயற்கைக்கோளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தான் ஒத்தி வைக்கப்படுவதாகவும் நாளை மாலை 4.12 மணிக்கு ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்