இன்று PSLV – C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்:
தற்போது விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ளவதற்காக மையம் அமைக்கும் திட்டத்திற்கு முன்னோட்டமாக பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் இன்று இரவு விண்ணில் ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன்
2035ஆம் ஆண்டு விண்வெளியில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
மேலும் இதற்கு முன் தயாரிப்பாக SpaDex என்ற திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. PSLV – C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்காக திங்கட்கிழமை இரவு 9.58 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட் மூலம் தலா 220 கிலோ எடை கொண்ட இரண்டு விண்கலன்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளன. மேலும் இதற்கான 48 மணி நேர கவுன்டவுன் சனிக்கிழமை இரவு தொடங்கியது.
பூமி சுற்றி சோதனை:
இதனை தொடர்ந்து இந்த இரண்டு விண்கலன்களும் பூமியில் இருந்து 355 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள புவி தாழ்வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் அவை பூமியை சுற்றிவரும் போது டாக்கிங் முறையில் இணைக்கும் சோதனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!
PSLV – C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம்:
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் இன்று இரவு 9.58 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாயும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரவு 10.15 மணிக்கு ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகள்:
2025 இல் இத்தனை ஞாயிற்றுக்கிழமையா! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே
2024ன் கடைசி நாளன்று (31.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!
புதுமை பெண் திட்டம் 2024.., இனி இந்த மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய்.., லட்டு மாதிரி வெளியான நியூஸ்!!