தமிழக பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று மோடியை மீண்டும் பிரதமராக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜக சார்பில் பல்வேறு கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டு தங்கள் அணியை பலப்படுத்தும் நோக்கில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
CLICK TO JOIN WHATSAPP GET DAILY NEWS
தமிழ்நாட்டில் பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் :
தமிழக பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட போகும் உத்தேச வேட்பாளர்களின் பட்டியல் கட்சி மேலிடத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்
குஷ்பு (திருப்பூர் )
வானதி சீனிவாசன் (கோவை )
சசிகலா புஷ்பா (தூத்துக்குடி )
விஜய தாரணி (கன்னியாகுமரி )
பால் கனகராஜ் (வட சென்னை )
வினோஜ் (மத்திய சென்னை )
நாராயணன் திருப்பதி (தென் சென்னை )
நயினார் நாகேந்திரன் (நெல்லை )
ராம சீனிவாசன் (விருதுநகர்)
ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணி கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டி ! மதிமுக மற்றும் விசிக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு – தொகுதி பங்கீடு செய்த திமுக !
3 தொகுதிகளில் பாஜக நிச்சயம் வெல்லும் :
கோவை, பொள்ளாச்சி. நீலகிரியில் பாஜக நிச்சயம் வெல்லும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக தெரிவித்த அவர் குறிப்பிட்ட இந்த மூன்று தொகுதிகள் பாஜகவின் வெற்றி எழுதிவைக்கப்பட்ட ஒன்று எனவும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் இது அனைவருக்கும் தெரியவரும் என குறிப்பிட்டுள்ளார்.