காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப்பட்டியல் வெளியீடு . தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வமாக அதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.
JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் :
இந்த நிலையில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி, விருதுநகர், ஆரணி, மயிலாடுதுறை, தேனி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருவள்ளூர் அல்லது தென்காசி மற்றும் கடலூர் அல்லது கோவை தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன.
பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் ! MLA வாக தொடர்வது உறுதியாகியுள்ளது – பொன்முடி மீண்டும் அமைச்சராக வாய்ப்பு !
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடலூர், மயிலாடுதுறை, தென்காசி தொகுதியில் திமுக சார்பில் களமிறக்கப்பட்டது. இந்த நிலையில் போனமுறை காங்கிரஸ் போட்டியிட்ட கரூர் தொகுதியில் இந்த முறை திமுக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.