தமிழக அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக கொண்டு வந்த புதுமை பெண் திட்டம் 2024 வாயிலாக இந்த மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
puthumai pen thittam:
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி ஆட்சியை பிடித்தது. மேலும் ஆட்சியை பிடித்த கையோடு, மகளிர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அதன்படி, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண வசதி தரும் விடியல் பயணத் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
புதுமை பெண் திட்டம் 2024.., இனி இந்த மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய்.., லட்டு மாதிரி வெளியான நியூஸ்!!
அதுமட்டுமின்றி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக புதுப்புது திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதன்படி, 2022ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி புதுமைப் பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இந்த திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவியர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் சுமார் 75,028 மாணவியர் மாதம் 1,000 ரூபாய் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.
IND vs AUS: 4வது டெஸ்ட் போட்டி நிறுத்தம்.., என்ன காரணம் தெரியுமா?
இந்நிலையில் புதுமைப் பெண் திட்டம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் கிட்டத்தட்ட 63,000 சதுர அடி பரப்பில் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டு வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் முழு வேலையும் முடிந்தது. இந்நிலையில் இந்த மினி டைடல் பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.50 மணிக்கு திறந்து வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
விஜயகாந்த் முதல் குரு பூஜைக்கு வந்த தவெக விஜய்?.., அண்ணனுக்காக நான் வரமா எப்படி?
வண்டலூர் பூங்கா செவ்வாய்கிழமை திறந்திருக்கும்! வருட பிறப்பை முன்னிட்டு அறிவிப்பு!
மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.., இரவு 1 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறப்பு?.., அரசு அறிவிப்பு!!
SUZUKI மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுஸுகி காலமானார்! அவருக்கு வயது 94