ஃபெஞ்சல் புயல் காரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுவதாக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல்:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஃபெஞ்சல் புயல் வலுவடைந்ததில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை புரட்டி போட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி இன்று, அதிகபட்சமாக விழுப்புரம், மயிலத்தில் 51 செ.மீ மழை பதிவானது. அடுத்தப்படியாக புதுச்சேரியில் 48.4 செ மீ மழை பதிவானது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், மக்களை காப்பாற்ற புதுச்சேரியில் 4,000 ஊழியர்கள் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!
அதுமட்டுமின்றி, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் 10,000 ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் புதுச்சேரி அரசு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது, கனமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் மதுக்கடைகளுக்கு 3 நாட்கள் லீவு – மதுப்பிரியர்களுக்கு வெளியான ஷாக் தகவல்!
அதுமட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களின் கஷ்டத்தை போக்கும் விதமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்க அரசு முடிவு செய்யப்பட்டது. மேலும் இறந்த கால்நடைகளில் பசுமாடு ஒன்றுக்கு ரூ.40,௦௦௦ நிவாரணம் வழங்க இருக்கிறது. கூரை வீடு ஒன்றுக்கு ரூ.10,000, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்