தற்போது புதுச்சேரியில் ஆகஸ்ட் 2ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜூலை 31ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆகஸ்ட் 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
புதுச்சேரி :
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் அனுமதி வழங்கிய பிறகே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும். இதற்கான கோப்பு மத்திய அரசின் நிதி, உள்துறை அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மத்திய அரசு அனுமதி கிடைக்காததால் புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய காலதாமதமானது. இந்நிலையில் புதுச்சேரி அரசு பட்ஜெட் கோப்பு அனுமதி கோரிக்கை குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் ரங்கசாமி போனில் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பட்ஜெட் தாக்கல் :
அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜூலை 31ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு எப்போது விநியோகம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!!
மேலும் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். அத்துடன் ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.