இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் - அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம் - புதுச்சேரி அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் - அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம் - புதுச்சேரி அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம்: புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம்  வீடு, வர்த்தக நிறுவனங்களுக்கானமின் கட்டணம் உயர்வை கொண்டு வந்தது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சமயத்தில் பெரும் எதிர்ப்பு நிலவியது. இன்னும் சொல்ல போனால் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம்

இதனால் அப்போது இந்த மின் கட்டணம் உயர்வு அப்படியே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜூன் மாதம் அறிவித்த இந்த அறிவிப்பை தற்போது எந்தவித மாற்றமும் இல்லாமல் அமலுக்கு வருகிறது. இதற்கான பொது அறிவிப்பினை புதுச்சேரி மின் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” புதுச்சேரியில் இருக்கும் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்டுக்கு 2.25 ரூபாய் மின்சாரக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் 101 முதல் 200 வரை யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 3.25 ரூபாய் மின் கட்டணமாக இருந்த நிலையில் தற்போது 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. puducherry electricity bill increased

Also Read: முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் – விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பதற்றத்தில் அதிகாரிகள்!

201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.5.40 ரூபாய் மின் கட்டணத்திற்கு பதிலாக ரூ.6 வசூலிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல் 300 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கான கட்டணம் 6.80 ரூபாயில் இருந்து தற்போது 7.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரியில் குடிசைக்கு தற்போது ஒரு யூனிட் மின்சாரம் 1.45 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி 

விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?

ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *