அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீராமர் கோவில் குடமுழுக்கு விழா வருகிற ஜனவரி 22ல் நடத்தப்பட இருக்கிறது. குட முழுக்கு விழாவில் பிரதமர் மோடி மற்றும் பல தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தியா முழுவதும் இந்த நாளை கொண்டாட இருக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
குடமுழுக்கை முன்னிட்டு மத்தியஅரசு ஊழியர்களுக்கு பாதி நாள் விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. அதே போல் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜன 22 அன்று புதுச்சேரியில் பொது விடுமுறை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.