தற்போது யூனியன் பிரதேசமான புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்களுக்கு தேவையான பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
புதுச்சேரியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் :
தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த வகையில் புதுச்சேரியில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
புதுச்சேரியில் 2024-25ம் ஆண்டிற்கு ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அறிவிக்கப்பட்ட திட்டங்கள் :
தேர்வுகளில் பாடங்கள் வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.5ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், அத்துடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணி, புத்தகப்பை வழங்கப்படும்.
புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலதின் போது நிவாரணத் தொகையாக ரூ.6,500-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்த்தப்படடுள்ளது.
மழைக்கால பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகையாக ரூ.3000-ல் இருந்து ரூ.6000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் ரேஷன் கடைகளை திறந்து அதன் மூலம் இலவச அரிசி, மானிய விலையில் கோதுமை, பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கப்படும்.
மேலும் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.20ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10ஆயிரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் காரைக்காலில் பழமையான அருங்காட்சியகம் அமைக்கப்படுவதுடன் பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகங்கள் மேம்படுத்தப்படும் என நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசுவிரைவு பேருந்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு – போக்குவரத்து கழகம் அறிவிப்பு !
புதுச்சேரி மடுகரையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியை ரூ.15 கோடி ரூபாயில் மேம்படுத்தி முன்மாதிரியான கலைக் கல்லூரியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் ரூ.1 கோடி செலவில் ஹாக்கி திடல் அமைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து புதுச்சேரியில் ஆயுஸ் மருத்துவப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாடி தோட்டம் அமைக்க ஒரு வீட்டிற்கு ரூ.5,000 வழங்கப்படும். அத்துடன் 400 விவசாயிகளுக்கு தீவனம் தயாரிக்கும் இயந்திரம் வழங்கப்படும்.