2025ல் புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட இருப்பதாக இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14ம் தேதி தமிழர்களால் கொண்டாடப்பட இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை மக்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை.., எவ்வளவு தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!
பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக தமிழகத்தில் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் பரிசுத் தொகை கிடையாது என்றும் கூறப்பட்டது. அதன்படி, தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
மேலும் புதுச்சேரி அரசில் இது போன்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுமா என்று மக்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புதுச்சேரியில் வாழும் மக்களுக்கு பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கமாக பணம் வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அவருக்கு பொங்கல் பரிசாக புதுச்சேரி மக்களுக்கு ரூ.500 அவர்களது வங்கி கணக்கில், நேரடியாக செலுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
கோவை LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து.., இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!!
ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாய்?.., ஒரே நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை.., இல்லத்தரசிகள் ஷாக்!!
போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம்..!
தமிழகத்தில் நாளை (04.01.2025) மின்தடை பகுதிகள் விவரம்! பவர் கட் ஏரியாக்களின் முழு தகவல்!
குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025.. மத்திய அரசு அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2025 – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!