ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் புதுச்சேரியில் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பள்ளி விடுமுறை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. அதே போல் ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடும் பாதிப்பு நிலவியது.
சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் – எந்தெந்த தேதிகளில் தெரியுமா?
குறிப்பாக அங்கு 49 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்ததும் மட்டுமல்லாமல் தண்ணீரில் தத்தளித்தனர். மேலும் அறுவடைக்கு தயாரான பயிர்களும் தண்ணீர் மூழ்கி நாசமானதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இதற்காக, நவம்பர் 27, 28, 29 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி அரசு முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பழனியில் 10 லட்சம் புதிய கார் திருட்டு – குறட்டை விட்டு தூங்கிய வாட்ச்மேன்!
அதாவது, ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகளுக்காக விடப்பட்ட விடுமுறைகளை ஈடு செய்யும் விதமாக பள்ளிகள் சனிக்கிழமைகளிலும் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் 7, 14 மற்றும் 21ம் தேதிகளில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்