
புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் இளைஞர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்து செயின், தோடுகளை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு
இப்போது இருக்கும் காலகட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. சொல்ல போனால் சாலையோரம் நடந்து செல்லும் பெண்களிடம் தங்க தாலி செயினை பறிக்கும் விஷயம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இதில் சில பெண்கள் இறந்தும் போய்யுள்ளனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது புதுக்கோட்டையில் நடைபெற்றுள்ளது. அதாவது புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணனின் மனைவி தான் பெரியநாயகி (வயது 60). இவர் நேற்று வழக்கம் போல மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை என்பதால் உறவினர்கள் அவரை தேடிச் சென்றனர். அப்போது அவர் காட்டுப் பகுதியில் தலையில் பலத்த ரத்த காயத்துடன் பெரியநாயகி இறந்து கிடந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளியை கண்டுபிடித்தது. அதாவது, அதே பகுதியை சேர்ந்த செல்வமணி (19) என்ற இளைஞர் மூதாட்டியை கொன்று அவரிடம் இருந்து செயின், தோடுகளை பறித்து ஒரு இடத்தில் வைத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. செல்வமணி சொன்ன இடத்திலிருந்து நகைகள் மீட்கப்பட்ட நிலையில் போலீசாரிடமிருந்து தப்பி ஓட முயன்ற போது கால் உடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் பாண்டிதுரையின் ரூ.85 லட்சத்தை காரில் இருந்து திருடிய கும்பலில் இருந்து கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.