புனே கார் விபத்து விவகாரம்: சமீபத்தில் புனேவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் வேதாந்த் அகர்வால் குடிபோதையில் சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி சென்று ஒரு பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் வந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆனால் காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவனுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து காவல்துறை இந்த சிறுவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சில மணி நேரத்தில் ஜாமீன் கிடைத்து விட்டது. இது குறித்து நீதிமன்றத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இந்த வழக்கை தீவிரமாக போலீஸ் விசாரணை செய்து வந்த நிலையில் அந்த சிறுவனின் தந்தை மீதும், சரக்கு கொடுத்த பார் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதை கேள்விப்பட்டு சிறுவனின் தந்தை தலைமறைவான நிலையில், கடந்த 21 ஆம் தேதி ஒளரங்காபாத்தில் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தனது ஓட்டுநர் ஒருவரை பழியை ஏற்க வைக்க முயற்சி செய்ததாக கூறி சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மருத்துவர் 2 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அந்த சிறுவன் குடிபோதையில் இருந்ததை உறுதி செய்ய போலீசார் அவனிடம் ரத்தப் பரிசோதனையை மேற்கொண்ட நிலையில், அந்த ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் இப்பொழுது 2 மருத்துவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. pune car accident case – Porsche Car accident – doctors arrested – tamilnadu latest news – accident news
கொடைக்கானல் மோயர் பாயிண்ட் வனப்பகுதியில் சிக்கிய சுற்றுலா பயணிகள் – வனத்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
செந்தில் தங்கை அழகுமணியை நியாபகம் இருக்கா?
அடேங்கப்பா.. 23 வருடமா நிக்காமல் ஒலிக்கும் இசை..
மாநாடு படத்தில் பர்ஸ்ட் நடிக்கவிருந்த வில்லன் யார் தெரியுமா?
தவெக கட்சி தலைவர் விஜய்யின் அடுத்த மூவ்