புனே கார் விபத்து விவகாரம் : ரத்த மாதிரியை மாற்றி தில்லுமுல்லு செய்த இளைஞரின் தாயார் கைது!புனே கார் விபத்து விவகாரம் : ரத்த மாதிரியை மாற்றி தில்லுமுல்லு செய்த இளைஞரின் தாயார் கைது!

புனே கார் விபத்து விவகாரம்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் புனேவில் ஒரு இளைஞர் மது போதையில் காரை ஓட்டி சென்று மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அந்த இளைஞரை காப்பாற்ற அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்து தில்லுமுல்லுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக அவருடைய தாத்தா தன்னிடம் வேலை பார்த்த நபரை இந்த பழியை ஏற்றுக் கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டார்.

புனே கார் விபத்து விவகாரம்

அதுமட்டுமின்றி அந்த இளைஞனின்  ரத்த மாதிரிகளை மாற்றி வைக்க முயற்சி செய்த இரண்டு மருத்துவர்களையும் காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் வழக்கு தொடரப்பட்ட அந்த இளைஞரின் தாய் ஷிவானி அகர்வால், தன்னுடைய மகன் மது அருந்தவில்லை என்று நிரூபிக்க அவருடைய ரத்த மாதிரியை மாற்றி வைத்து சான்று பெற்றுள்ளார். இதை அறிந்து கொண்ட காவல்துறை அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அந்த இளைஞனின் குடும்பமே இப்போது சிறையில் தான் இருந்து வருகிறது. pune car accident incident – car accident news – death news

LPG cylinder price update: அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை… எவ்வளவு தெரியுமா? வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *