புனே சொகுசு கார் விபத்து விவகாரம் - 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் வழங்கிய மும்பை நீதிமன்றம்!புனே சொகுசு கார் விபத்து விவகாரம் - 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் வழங்கிய மும்பை நீதிமன்றம்!

நாட்டை உலுக்கிய புனே சொகுசு கார் விபத்து1 விவகாரம்: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் கல்யாணி நகர் என்ற பகுதியில் கடந்த 19-ம் தேதி அதிகாலையில் பிரபல தொழிலதிபரின் மகனான 17 வயது சிறுவன் குடிபோதையில் சொகுசு காரை  ஓட்டி வந்த நிலையில் திடீரென எதிரில் வந்த இளம் ஐ.டி. ஊழியர்கள் இருவர் மீது மோதியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அந்த சிறுவனை காவல்துறை கைது செய்து  சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து கொஞ்ச நேரத்தில் அந்த ஏறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட நிலையில் அது பெரிய சர்ச்சையாக பேசப்பட்ட நிலையில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, அச்சிறுவன் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். மேலும் இது தொடர்பாக  அந்த சிறுவனின் தாயார் மற்றும் தாத்தா ஆகியோர் செய்த தில்லுமுல்லு காரணமாக கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது சொகுசு கார் ஓட்டி இரண்டு உயிர்களை கொலை செய்த அந்த 17 வயது சிறுவனுக்கு தற்போது மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அந்த சிறுவனின் தந்தைக்கு சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம் – வழக்கு தொடர்ந்த பெண் – இது என்னடா புதுசா இருக்கு!

  1. car accident news 2024 ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *