கிரைய பத்திரத்தை ரத்து செய்வதில் புதிய விதிமுறை 2024: பொதுவாக மக்கள் புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திர ஆபிஸில் கிரைய பத்திர பதிவு செய்வது வழக்கம். மேலும் இந்த கிரயம் பத்திரப்பதிவுக்கு முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதமும், பதிவு கட்டணம் 2 சதவீதமும் என மொத்தம் 9 சதவீதம் பணம் தமிழக அரசு வசூல் செய்கிறது. மேலும் கிரைய செய்தவர்கள் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை ரத்து செய்யவும் சட்டத்தில் இடம் உண்டு.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் ரத்து செய்வதற்கு இரு தரப்பினரும் சேர்ந்து ரூ. 50 செலவில் ரத்து ஆவணம் மேற்கொள்ள வேண்டும். அப்படி ரத்து செய்தால் புதிதாக சொத்து வாங்கியவர்கள் பெயரிலேயே இருக்கும். எனவே ரத்து ஆவணம் மேற்கொள்வதை விட புதிதாக கிரைய பத்திரத்தை பதிவு செய்கின்றனர். இதனால் மீண்டும் பதிவு செய்வதற்கான 9 சதவீதமும் பணம் அரசு கிடைத்து வருகிறது. இந்நிலையில் கிரைய ரத்து ஆவணம் குறித்து பத்திரப்பதிவு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனிமேல் கிரைய பத்திரத்தை ரத்து செய்தால் 1000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் பத்திரப்பதிவு துறை தெரிவித்துள்ளது. கிரைய பத்திரத்தை ரத்து செய்வதில் புதிய விதிமுறை 2024