Home » சினிமா » புஷ்பா 2 அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை – ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் குடும்பம்!

புஷ்பா 2 அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை – ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் குடும்பம்!

புஷ்பா 2 அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை - ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் குடும்பம்!

சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா 2 ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு தற்போது 14 நாட்கள் சிறை விதித்து நீதிமன்றம் உத்தரவு.

Pushpa 2:

புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. இப்படி இருக்கையில்,  படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்ட தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்த போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசல் காரணமாக ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அல்லு அர்ஜுன் வீட்டுக்கு வந்து அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து, விசாரணைக்கு பிறகு அல்லு அர்ஜுனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவரின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. இதையடுத்து, அல்லு அர்ஜுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் சிறைக்கு அனுப்பப்பட இருக்கிறார். மேலும் ஜாமீன் பெற அல்லு அர்ஜுனின் வழக்கறிஞர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் கூட, அடுத்த 2 நாட்கள் சனி மற்றும் ஞாயிறு என்பதால் நீதிமன்றம் செயல்படாது. அதனால் திங்கள் அன்று தான் ஜாமீன் கோர முடியும். இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

ரோஜா சீரியல் 2வது சீசன் வரப்போகிறது? .. ஹீரோயின் யார் தெரியுமா?

அல்லு அர்ஜுனிடம் போலீஸ் விசாரணை – “புஷ்பா 2” படத்தால் வந்த சோதனை!

விஜய் டிவிக்கு தாவிய எதிர்நீச்சல் நடிகை – டிஆர்பிக்காக VIJAY TV போட்ட வலை!

சூரி படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை – அடேங்கப்பா இந்த ஹீரோயினா!

2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா – பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top